பணம் கேட்டு மிரட்டியவர் கைது
தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முனியசாமிபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ராஜ்குமார் (வயது 27). சம்பவத்தன்று தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் வந்து கொண்டு இருந்த ஒருவரை, ராஜ்குமார் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தார்.