அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் ஆணையாளர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் தமிழக பேரூராட்சிகளின் ஆணையாளர் செல்வராஜ் நேரில் ஆய்வு செய்தார். குடிநீர் வழங்கல், நோய் தடுப்பு பணிகள், டெங்கு விழிப்புணர்வு பணிகள், மாடி தோட்டம், திடக்கழிவு மேலாண்மை பணிகள், பேரூராட்சியின் வருவாய் உயர்த்தும் வழிகள், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் நேரில் செய்தார்.
அப்போது அச்சரப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் டி.ஜி.எழிலரசன், கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.