உத்திரமேரூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
உத்திரமேரூர் பகுதியில் கடந்த 15 நாட்களில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. திருட்டு சம்பவங்களை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் மற்றும் போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டது.;
நேற்று முன்தினம் இரவு உத்திரமேரூர் அடுத்தகாரணி மண்டபம் பகுதியில் தனிப்படை போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது அந்தபகுதியில் சுற்றித்திரிந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பதில் சொல்லவே அவரை பெருநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அவர் களியாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த புஷ்பராஜ் (வயது 26) என்பதும் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்க பஞ்சாட்சரம் வீட்டில் அவரது மனைவியிடம் இருந்து நகையை பறித்துச்சென்றதையும், 10 நாட்களுக்கு முன்பாக மானாமதி மேட்டு தெருவில் உள்ள ஒரு வீட்டில் திருடியதையும், உத்திரமேரூர் ஒன்றியம் ஒழுகரையில் உள்ள வீட்டில் திருடியதையும் ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடமிருந்து 9 பவுன் நகையை போலீசார் கைப்பற்றினர்.