காஞ்சீபுரத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் கைது
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.
அதன்பேரில் காஞ்சீபுரம் மாவட்டம் தாமல் கிராமத்தை சேர்ந்த பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி என 21 வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான மணிமாறன் (வயது 28), 11 வழக்குகளில் சம்பந்தப்பட்ட விஜய் (25) மற்றும் 12 வழக்குகளில் சம்பந்தப்பட்ட துளசிராமன் (25) ஆகியோர் தலைமறைவாக இருந்து கொண்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் பல்வேறு கொலை மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி படப்பை குணாவிற்கு உதவி செய்த போந்தூரை சேர்ந்த சிவா என்கிற பரமசிவம(43)், வல்லம் பகுதியை சேர்ந்த சதீஷ்(28) ஆகியோரை ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.