நெல்லை மாவட்டத்தில் 10 ரவுடிகள் அதிரடி கைது
நெல்லை மாவட்டத்தில் 10 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் ரவுடிகளை கைது செய்ய உத்தரவிடப்பட்டது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அந்த பட்டியலில் உள்ள 10 பேரை அதிரடியாக போலீசார் நேற்று கைது செய்தனர்.
விக்கிரமசிங்கபுரம், தாழையூத்து, சுத்தமல்லி, பாளையங்கோட்டை, பத்தமடை, முன்னீர்பள்ளம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, சீவலப்பேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் உடனடியாக பாளையங்கோட்டை மத்திய சிறை மற்றும் கிளை சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை வழக்கில் 3 பேரும், கஞ்சா விற்ற வழக்கில் ஒருவரும், மது விற்ற வழக்கில் 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.