நெல்லை மாநகரில் 14 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
நெல்லை மாநகரில் 14 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகரில் 14 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார். நெல்லை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதர்சன் ஐகிரவுண்டு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்துக்கும், பேட்டை சிவகளை பாளையங்கோட்டைக்கும், மேலப்பாளையம் முனீசுவரி ஏ.சி.டி.யு. பிரிவுக்கும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு முருகையா பேட்டைக்கும், குற்றப்பிரிவு பாத்திமா பர்வீன் மேலப்பாளையத்துக்கும், ஐகிரவுண்டு முருகன் மேலப்பாளையத்துக்கும், ஏ.சி.டி.யு. பிரிவு சங்கரன் வெடிகுண்டு தடுப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதேபோல் தீவிர குற்ற தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நயினார் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்துக்கும், மோப்பநாய் பிரிவு முத்துகுமார் சந்திப்பு குற்றப்பிரிவுக்கும், சைபர் கிரைம் வேலம்மாள் மாநகர குற்றப்பிரிவுக்கும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு பிரம்மநாயகம் பெருமாள்புரத்துக்கும், பெருமாள்புரம் சுந்தரமூர்த்தி சந்திப்புக்கும், சந்திப்பு குற்றப்பிரிவு சாமி மேலப்பாளையத்துக்கும், மேலப்பாளையம் லட்சுமணன் பாளையங்கோட்டை குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.