விக்கிரமசிங்கபுரத்தில் சூறைக்காற்றுக்கு சாய்ந்த மரம்

விக்கிரமசிங்கபுரத்தில் சூறைக்காற்றுக்கு மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-07-17 20:55 GMT
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று காலையில் சூறைக்காற்று வீசியது. இதில் விக்கிரமசிங்கபுரம்- பாபநாசம் மெயின் ரோடு மருதம் நகரில் சாலையோரம் நின்ற பழமைவாய்ந்த புங்கை மரம் வேரோடு சாலையில் சாய்ந்து விழுந்தது. அப்போது அங்குள்ள மின்கம்பங்களின் வழியாக சென்ற உயர் அழுத்த மின்கம்பிகளின் மீதும் மரக்கிளை விழுந்ததில் அவைகளும் அறுந்து விழுந்தன.

அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சாலையில் மரம் சாய்ந்ததால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மகேசுவரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, சாலையில் சாய்ந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அந்த வழியாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மின்வாரிய ஊழியர்களும் விரைந்து சென்று, மின்இணைப்பை துண்டித்து மின்கம்பிகளை சீரமைத்தனர். 

மேலும் செய்திகள்