பிளஸ்-1 மாணவி மாயமான வழக்கில் திருப்பம்: பலாத்காரம் செய்ததாக தந்தை, நண்பன் உள்பட 4 பேர் கைது

பிளஸ்-1 மாணவி மாயமான வழக்கில் திருப்பமாக, அவரை பலாத்காரம் செய்ததாக தந்தை, நண்பன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-17 19:32 GMT
துறையூர்,

பிளஸ்-1 மாணவி மாயமான வழக்கில் திருப்பமாக, அவரை பலாத்காரம் செய்ததாக தந்தை, நண்பன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

பிளஸ்-1 மாணவி மாயம்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது மாணவி துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 2-ந்தேதி அந்த மாணவி வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். 

இந்தநிலையில் மாணவி அவருடைய உறவினர் வீட்டில் இருப்பதாக தகவல் வரவே போலீசார் அந்த மாணவியை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த மாணவி கூறிய தகவலை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

தவறாக நடந்த தந்தை, நண்பன்

அப்போது, மின்வாரியத்தில் பணியாற்றும் மாணவியின் தந்தை மாணவியிடம் தவறாக நடந்ததாகவும், அதனால் வீட்டை விட்டு வெளியேறி நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியதாகவும், அவரும் தன்னிடம் தவறாக நடந்ததாகவும், அதனால் அங்கிருந்து தனது உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து துறையூர் போலீசார் இந்த வழக்கை முசிறி அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றம் செய்தனர். அதன்பேரில் மாணவியை பலாத்காரம் செய்ததாக மாணவியின் தந்தை, நண்பர் மற்றும் உடந்தையாக இருந்த தோழி, மற்றொரு நண்பர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கை மாற்றம் செய்து 4 பேரையும் நேற்று இரவு கைது செய்தனர்.

மேலும் செய்திகள்