கருப்பு பூஞ்சை நோய்க்கு 394 பேர் பாதிப்பு

சேலத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-07-17 19:21 GMT
சேலம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசின் பாதிப்பு 200-க்கும் குறைவாக இருந்து வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு 91 ஆயிரத்தை தாண்டியது. இதனிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அதில் இருந்து குணமடைந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் என சிலர் கருப்பு பூஞ்சை என்ற நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சைக்கு 394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 340 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இவர்களில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 242 பேர் ஆவர். இதேபோல் 54 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர். 

மேலும் செய்திகள்