ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் முறைகேடு

தம்மம்பட்டியில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் முறைகேடு செய்யப்பட்டதாக ஆத்தூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.;

Update: 2021-07-17 19:21 GMT
தம்மம்பட்டி
தம்மம்பட்டி உடையார்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் மற்றும் ஜாப் டைப்பிங் கடையில், தட்கல் முறையிலான ெரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வந்தது. அந்த கடையில் முன்பதிவு செய்வதில், முறைகேடு செய்து பொதுமக்களிடம் கூடுதல் விலைக்கு ரெயில் டிக்கெட்டுகளை விற்று வருவதாக ஆத்தூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபிரதாப் தலைமையிலான ெரயில்வே போலீசார் தம்மம்பட்டி உடையார்பாளையம் பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் திடீர் சோதனை நடத்தினர். பின்னர் அங்கிருந்த கணினியை ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர். தொடர்ந்து கடைக்காரரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்