பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் மாட்டு வண்டி-சைக்கிள் ஊர்வலம்
காங்கிரசார் மாட்டு வண்டி-சைக்கிள் ஊர்வலம் நடத்தினர்.
பொன்னமராவதி:
பொன்னமராவதியில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில், அழகிய நாட்சியம்மன் கோவிலிலிருந்து பஸ் நிலையம் வரை மத்திய அரசு பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்த்தியதை கண்டித்து நகர காங்கிரஸ் கட்சி தலைவர் பழனியப்பன் தலைமையில், மாட்டு வண்டி மற்றும் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், கட்சி நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.