கிராவல் மண் கடத்திய 2 பேர் கைது லாரி, 2 டிராக்டர்கள் பறிமுதல்

கிராவல் மண் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-17 18:29 GMT
ஆவூர்:
மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், செவ்வந்தி உள்ளிட்ட போலீசார் நேற்று எழுவம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விராலிமலை-கீரனூர் சாலையில் வந்த ஒரு டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, அதன் டிரைவர் கீரனூர் அருகே உள்ள திருமலைராயபுரம் பகுதியை சேர்ந்த மைக்கேல்ராஜ் (வயது 32), லாரி உரிமையாளர் செங்கோல்ராஜ் (43) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து கிராவல் மண் அள்ளிய இடத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது போலீசார் வருவதை பார்த்ததும் கிராவல் மண் ஏற்றி வந்த 2 பேர் டிராக்டர்களை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். பின்னர் 2 டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிராக்டர் டிரைவர்கள் எழுவம்பட்டியை சேர்ந்த முத்துசாமி மகன் ராபர்ட் கென்னடி, ஞானமுத்து மகன் அசோக் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்