கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராகலாம்
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராகலாம்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராவதற்கு தேவையான உறுப்பினர் விண்ணப்பங்கள் வழங்கப் படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தில் விவசாயிகள் தங்கள் முழு விவரங்களை பூர்த்தி செய்து தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, பான்கார்டு ஆகியவற்றுடன் பங்குத்தொகை ரூ.100 மற்றும் நுழைவுக்கட்டணம் ரூ.10 ஆகியவற்றுடன் தாங்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு நேரில் சென்று வழங்கி உறுப்பினராகி கொள்ளலாம். நேரில் செல்ல இயலாத சூழ்நிலையில் தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம். தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்பும்போது முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மேலே குறிப்பிட்ட ஆவணங்களை இணைத்து பங்குத்தொகை மற்றும் நுழைவுக்கட்டணத்தினை அஞ்சலக பண அஞ்சல் மூலமாக செலுத்தி அதன் ரசீது எண், செலுத்தப்பட்ட அஞ்சலகத்தின் பெயர், முகவரி ஆகியவற்றை குறிப்பிட்டு சங்கத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
எனவே விவசாயிகள், பொதுமக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராகி அதன் சேவைகளை பெற்று தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். இந்த தகவலை விருதுநகர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.