பஸ்நிலையத்தில் தடையை மீறி நுழைந்த ஆட்டோக்களுக்கு ரூ.53 ஆயிரம் அபராதம்

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தடையை மீறி நுழைந்த ஆட்டோக்களுக்கு ரூ.53 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-07-17 18:11 GMT
வேலூர்
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தடையை மீறி நுழைந்த ஆட்டோக்களுக்கு ரூ.53 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

வேலூர் பழைய பஸ்நிலையத்தின் உள்ளே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி ஆட்டோக்கள் பஸ் நிலையத்துக்குள் வந்து பயணிகளை ஏற்றி சென்றன.

அதனால் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் உள்ளே வந்து வெளியே செல்வதில் மிகுந்த சிரமம் காணப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரின் தடையை மீறி பழைய பஸ்நிலையத்துக்குள் நுழையும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கும்படி கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். அதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் அறிவுறுத்தலின்பேரில் வேலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று பழைய பஸ்நிலையத்தில் தடையை மீறி நுழைந்த ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வேலூர்-ஆற்காடு பஸ்கள் நிற்கும் பகுதி மற்றும் பஸ்நிலையத்தின் உள்ளே பயணிகளை ஏற்றிக்கொண்டும், பஸ்சில் வந்து இறங்கும் பயணிகளை ஏற்றுவதற்காக வந்த ஆட்டோக்களுக்கும் ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று ஒரேநாளில் 106 ஆட்டோக்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகை ஆட்டோவின் தகுதிச்சான்று புதுப்பிக்கும்போது வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்