மின்சாரம் தாக்கி பெண் மயில் சாவு
பரமத்திவேலூரில் மின்சாரம் தாக்கி பெண் மயில் செத்தது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் முக்கிய சாலையாக பள்ளி சாலை உள்ளது. நேற்று மாலையில் இந்த சாலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள கட்டிடத்தின் மேல் பெண் மயில் ஒன்று அமர்ந்திருந்தது. திடீரென லேசான மழை பெய்ய தொடங்கியதும், அந்த பெண் மயில் அங்கிருந்து பறக்க முயன்றது. இதில் எதிர்பாராதவிதமாக உயர் மின்னழுத்த கம்பியில் விழுந்து மின்சாரம் தாக்கி துடிதுடித்து இறந்து கீழே விழுந்தது. இது குறித்து அந்த பகுதியில் இருந்த வர்த்தக நிறுவனத்தினர், நாமக்கல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் மின்சாரம் தாக்கி இறந்த பெண் மயிலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நாமக்கல்லுக்கு எடுத்து சென்றனர்.