கைக்குழந்தையுடன் சாலையை கடந்த பெண் மோட்டார்சைக்கிள் மோதியதில் இறந்தார்.

கைக்குழந்தையுடன் சாலையை கடந்த பெண் மோட்டார்சைக்கிள் மோதியதில் இறந்தார்.;

Update: 2021-07-17 17:44 GMT
அணைக்கட்டு

கைக்குழந்தையுடன் சாலையை கடந்த பெண் மோட்டார்சைக்கிள் மோதியதில் இறந்தார்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கூத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். இவரது மகன் சுரேந்தர் பெயிண்டராக வேலைபார்த்து வருகிறார். சுரேந்தரின் மனைவி பெயர் சரிதா. இவர்களுக்கு 3 மகள்கள். இதில் ஒரு மகள் கைக்குழந்தையாகும். 

சரிதா நேற்று கைக் குழந்தையுடன் பகல் 2 மணியளவில் அந்தப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக செதுவாலையைச் சேர்ந்தவர் சென்ற
ஒருவர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக அந்த வழியாகச் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராதவிதமாக கைக்குழந்தையுடன் சாலையை கடந்து கொண்டிருந்த சரிதா மீது பயங்கரமாக மோட்டார்சைக்கிள் மோதியது இதில் சரிதாவும் மற்றும்அவரதுகைக் குழந்தை மோட்டார் சைக்கிளில் சென்றவர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தைபார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சரிதாவை பரிசோதனை செய்த டாக்டர்வரும் வழியிலேயே சரிதா இறந்து விட்டதாக கூறினர்.மேலும் மோட்டார் சைக்கிளில் சென்றவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர் 

இதுகுறித்து சரிதாவின் கணவர சுரேந்தர் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்