தேயிலை தோட்டங்களில் உலா வரும் கரடி

கோத்தகிரி அருகே தேயிலை தோட்டங்களில் கரடி உலா வருகிறது.

Update: 2021-07-17 17:33 GMT
கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள கோட்டா ஹால் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து தர்மோனா செல்லும் சாலையின் ஓரம் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளன. 

இந்த தேயிலை தோட்டங்களில் கடந்த சில நாட்களாக கரடி ஒன்று நடமாடி வருகிறது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.  இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

 மேலும் தேயிலை தோட்டங்களில் உலா வரும் கரடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் அபாயம் உள்ளதால் உடனடியாக கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்