மோட்டார்சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு
சாத்தான்குளம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 52). கூலித்தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் பொன்ராஜ் நேற்று தனது மோட்டார்சைக்கிளில் தட்டார்மடம் சென்று விட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். சண்முகபுரம் பகுதியில் வந்தபோது மோட்டார்சைக்கிள் திடீரென நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த வீட்டு சுவற்றில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.