காங்கேயம் பகுதியில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

காங்கேயம் பகுதியில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-17 17:18 GMT
காங்கேயம், 
காங்கேயம் பகுதியில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கஞ்சா விற்பனை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காங்கேயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து காங்கேயம் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் காங்கேயத்தில் கஞ்சா விற்ற காங்கேயம் திரு.வி.க.நகரை சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 47), கவாஸ்கர் (31) ஆகிய 2 பேரையும் காங்கேயம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
விசாரணையில் ஜெயலட்சுமி, கவாஸ்கர் ஆகிய 2 பேரும் பழனி மற்றும் சேலம் பகுதிகளிலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பரிந்துரையின் பேரில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் கஞ்சா விற்ற 2 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார். 
இதன்படி கோவை மத்திய சிறையில் இருந்த ஜெயலட்சுமி மற்றும் கவாஸ்கரிடம் காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்