தொழிலாளியிடம் பணம் பறிப்பு; 2 பேர் கைது
தூத்துக்குடி அருகே தொழிலாளியிடம் பணம் பறித்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் கிருஷ்ணா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (வயது 33). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று காலை முள்ளக்காடு அருகே உள்ள பொட்டல்காடு விலக்கு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பொட்டல்காடு விலக்கு பகுதிக்கு எப்படி செல்ல வேண்டும் என்று வழி கேட்டுள்ளனர். அவர்களிடம் கணேசமூர்த்தி இந்த வழியாக செல்லவேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தபோது திடீரென ஒருவன் அவரது சட்டைப் பையில் இருந்து பணத்தை எடுத்துள்ளான்.
இதுகுறித்து கணேசமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூசை நகர் பகுதியைச் சேர்ந்த சந்தன ராஜ் (35), ஆல்பர்ட் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.