ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
கோவில்பட்டி அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் இறந்தார்.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி ெரயில் நிலையத்திற்கும், நாட்டின்புத்தூர் ெரயில் நிலையத்திற்கும் இடையில் இனாம் மணியாச்சி சந்திப்பு அருகில் ெரயில்வே தண்டவாள பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலை நசுங்கி பிணமாக கிடப்பதாக தூத்துக்குடி ெரயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ரெயிலில் அடிபட்டு இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், தண்டவாளத்தை கடக்கும் போது இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.