குடிபோதையில் காலில் விழுந்த தலைமையாசிரியர் பணியிடைநீக்கம்

குடிபோதையில் காலில் விழுந்த பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2021-07-17 17:11 GMT
காவேரிப்பாக்கம்
குடிபோதையில் காலில் விழுந்த பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படுகிறது. இங்கு கடந்த 14-ந் தேதி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது கல்வி அதிகாரிகள் சாதி ரீதியில் செயல்படுவதாக கூறி அதனை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

ஆர்ப்பாட்டத்தின்போது பாணாவரத்தை அடுத்த காட்டுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரான புவியரசன் போதையில் வந்ததாக கூறப்படுகிறது. அவர் கண்டன உரையை ஆற்றிக் கொண்டிருந்த சங்க நிர்வாகிகள் காலில் திடீரென விழுந்து வணங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது குறித்து விசாரணை செய்து அறிக்கை அனுப்ப அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலர் ரமேசுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். 

அதன்படி கல்வி மாவட்ட அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை அனுப்பினார். இந்த நிலையில் மது போதையில் காலில் விழுந்த காட்டுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் புவியரசனை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்