பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கயத்தாறில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2021-07-17 17:10 GMT
கயத்தாறு:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கயத்தாறில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு நகர காங்கிரஸ் தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர்கள் தனுஷ்கோடி, திருப்பதி ராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மகிளா காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவி திவ்யா, வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் பிரதிபாரதி, நெல்லை மாவட்ட மகளிரணி தலைவி அனிஷ் பாத்திமா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார், கயத்தாறு நகர செயலாளர் ஜெயராஜ், மகளிரணி ஒன்றிய தலைவி சுசீலா, பொருளாளர் தண்டபாணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்