மோட்டார்சைக்கிள் மோதி பெயிண்டர் பலி
குரும்பூர் அருகே மோட்டார்சைக்கிள் மோதி பெயிண்டர் இறந்தார்.;
தென்திருப்பேரை:
குரும்பூரை அடுத்த நாலுமாவடி கன்னிவிளையை ேசர்ந்தவர் செல்லத்துரை மகன் கல்யாண ராஜ் (வயது 45). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கல்யாண ராஜ் நேற்று முன்தினம் இரவு புதுமனை புகுவிழா வீட்டிற்கு சென்றுவிட்டு ஏரல்- குரும்பூர் சாலையில் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் மோதி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கல்யாண ராஜ் இறந்தார். மேலும் எதிரே மோட்டார்சைக்கிளில் வந்த காராவிளையை ேசர்ந்த ராமன் மகன் குமரேசன் (34) என்பவரும் பலத்த காயம் அடைந்து திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.