வெடிகுண்டு மிரட்டல் விடுத்த காவலாளி கைது

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த காவலாளி கைது

Update: 2021-07-17 16:58 GMT
கோவை

சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் காலையில் மர்ம ஆசாமி ஒருவர் பேசி, கோவை ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.

இது குறித்த தகவலின் பேரில் கோவை வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயில் நிலையம் முழுவதும் சோதனை நடத்தினர். 

மோப்ப நாய் மூலமும் சோதனை நடத்தப்பட்டது. அதில், ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. புரளி என்பது தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கோவை ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கோவையை அடுத்த துடியலூர் அருகே வடமதுரை சேர்ந்த காவலாளி செந்தில்குமார் (வயது 40) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் இருப்பதும், கடந்த மே மாதம் அவருடைய மனைவி கொரோனாவுக்கு பலியானதால் அவர் மனவேதனையில் இருந்ததும் தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்