உடுமலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103.36 ஆக உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

உடுமலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103.36 ஆக உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

Update: 2021-07-17 16:36 GMT
உடுமலை
உடுமலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103.36 ஆக உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பெட்ரோல் விலை உயர்வு
பொதுமக்களுக்கு இருசக்கர வாகனங்களின் தேவை அத்தியாவசியமாகி விட்டது. வேலைக்கு செல்வது, பொருட்களை வாங்கி வரச்செல்வது உள்பட எந்த ஒரு வேலைக்கும் வீட்டை விட்டு வெளியே செல்வதென்றாலும் இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர். அதனால் உடுமலையில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளது. 
அதேபோன்று கார்கள், சரக்குவாகனங்கள், ஆட்டோக்கள், வேன்கள் ஆகியவையும் அதிகம் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருலிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது. அப்போதே வாகன ஓட்டுனர்கள் புலம்பினர். இந்த விலை ஏற்றம் மேலும், மேலும் தொடர்ந்து வருகிறது.
வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சி
இந்த நிலையில் உடுமலையில் தற்போது ஒருலிட்டர் பெட்ரோல் விலை 103 ரூபாய் 36 பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 95 ரூபாய் 25 பைசாவாகவும் உள்ளது. இதனால் சரக்கு வாகன ஓட்டிகள் அதிக வாடகை வசூலிக்கும் நிலை ஏற்படும்.
மேலும் வாடகை வாகனங்களின் வாடகையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்கு செல்லும் வாகன ஓட்டுனர்கள் விலையைக்கேட்டதும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்