திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-07-17 15:54 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 88 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் உயிரிழந்து உள்ளார். 

நேற்று வரை 980 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 51 ஆயிரத்து 193 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் 49 ஆயிரத்து 585 பேர் குணமடைந்து உள்ளனர். 628 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்