உற்சாகமாக சுற்றித்திரியும் வனவிலங்குகள்
உற்சாகமாக சுற்றித்திரியும் வனவிலங்குகள்;
கோவை
கோவை வனப்பகுதியில் வனவிலங்குகள் உற்சாகமாக சுற்றித்திரியும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்ட வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது
வனவிலங்குகள்
கோவை மாவட்ட வனப்பகுதி சுமார் 70 ஆயிரம் ஹெக்டேர் பரப்ப ளவு கொண்டது.
இங்கு புலி, சிறுத்தை, காட்டெருமை, கழுதைப்புலி, காட்டு நாய்கள், புள்ளிமான், அரிய வகை பறவைகள், ராஜநாகம் போன்ற உயிரினங்கள் வசித்து வருகின்றன.
கோவை மாவட்ட வனப்பகுதி கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட் டின் பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து யானைகள் வருவதற்கான பாதையாக இருக்கிறது.
கண்காணிப்பு கேமரா
வனம் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பதில் வன ஊழியர்கள், பழங்குடியினர், கிராமவாசிகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பு முக்கியமானது. இதன் காரணமாக வனப்பகுதி பசுமையாகவும், அதிக வனவிலங்குகளின் இருப்பிடமாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் கோவை வனப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட் டத்தை அறிய பல இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப் பட்டு உள்ளன. இதன் மூலம் வனவிலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.
வேட்டையாடும் காட்சி
அந்த வகையில் கோவை மாவட்ட வனப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை வேட்டையாடும் காட்சி, காட்டு யானைகள் தொட்டியில் தண்ணீர் குடிக்கும் காட்சி, கழுதைப்புலி, காட்டு மாடுகள் தண்ணீர்தொட்டி அருகே உற்சாகமாக நிற்பது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.
இதன் மூலம் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு ஏற்ற சூழல் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே வனச்சூழலை பாதுகாக்க வனத்துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.