6 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி

6 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி

Update: 2021-07-17 15:47 GMT
கோவை

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரிந்த போது, மரணமடைந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்க ளான தொண்டாமுத்தூரை சேர்ந்த மீரா, போத்தனூரை சேர்ந்த மஞ்சுளா,

 சுப்பராம்பாளையத்தை தீபா, சுண்டக்காமுத்தூரை சேர்ந்த ராஜ்குமார், சிங்காநல்லூரை சேர்ந்த கோகுல், 


வால்பாறையை சேர்ந்த மனோஜ் குமார் ஆகிய 6 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு பள்ளிகளில் இளநிலை உதவியாளர் பணி ஒதுக்கப்பட் டது.

 இதற்கான பணி நியமன ஆணையை கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் வழங்கினார். 

பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட வாரிசுதாரர்கள், அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்