தள்ளுவண்டி கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவண்ணாமலையில் தள்ளுவண்டி கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அடிஅண்ணாமலை மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் காமராஜன் (வயது 37), அண்ணா நுழைவு வாயில் அருகில் தள்ளுவண்டியில் குளிர்பான கடை வைத்திருந்தார். இவரது மனைவி புனிதலட்சுமி.
சம்பவத்தன்று இரவு காமராஜன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி, அவரிடம் கேட்டதாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த காமராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.