உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் பயன்பெறுமாறு கலெக்டர் வேண்டுகோள்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.,
திருவள்ளூர்,
தமிழ்நாடு வக்பு வாரியம் மூலம் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனாளி வாங்கும் இருசக்கர வாகனம் 01-01-2020-க்கு பிறகு தயார் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது வாகனத்தின் விலை 25 ஆயிரம், இதில் எது குறைவோ அந்த தொகையை மானியமாக வழங்கப்படும். எனவே இத் திட்டத்தின் கீழ் பயன்பெற திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வக்பு நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உலமாக்களாக பணியாற்றியிருக்க வேண்டும்.
18 வயதிலிருந்து 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமான சான்று, வயது சான்று, புகைப்படம், சாதிச்சான்று, ஓட்டுனர் உரிமத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தேவையான விண்ணப்பத்தை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பெற்று 30-ந்தேதிக்குள் சமர்ப்பித்து பயன் பெறலாம் என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.