ஆபத்தான முறையில் காட்சியளிக்கும் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கும்மிடிப்பூண்டியில் ஆள்நடமாட்டமுள்ள தெருவில் சேதம் அடைந்து உள்ள மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பத்தை அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Update: 2021-07-17 04:56 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வசந்த பஜார் தெருவில் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்து உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு எலும்பு கூடு போல காட்சியளிக்கிறது.

பயன்பாட்டில் உள்ள இந்த மின்கம்பம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்திற்கு செல்லும் இந்த முக்கிய சாலையில் பொதுமக்களின் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஆபத்தான நிலையில் அச்சுறுத்தும் விதமாக காணப்படுகிறது.

எனவே மின்கம்பம் கீழே சாய்ந்து உயிர் சேதம் ஏற்படும் முன்பு அதனை அகற்றி புதிய மின் கம்பத்தை அங்கு அமைத்திட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்