பண்ணாரி அருகே ரோட்டை கடந்த யானை கூட்டம்- சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்
பண்ணாரி அருகே ரோட்டை கடந்த யானை கூட்டத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.
பவானிசாகர்
பண்ணாரி அருகே ரோட்டை கடந்த யானை கூட்டத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.
யானை கூட்டம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் யானைகள் பண்ணாரி ரோட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஓடைக்கு கூட்டமாக தண்ணீர் குடிக்க செல்வது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில், பண்ணாரியில் இருந்து திம்பம் மலைப்பாதை செல்லும் ரோட்டில் கிழக்கு வனப்பகுதியில் இருந்து மேற்கு வனப்பகுதிக்கு யானைகள் கூட்டமாக கடந்து சென்றது.
மகிழ்ந்தார்கள்...
ரோட்டை கடக்கும்போது சிறிது நேரம் சாலையின் ஓரத்திலேயே யானைகள் நின்றன. பின்னர் சாலையை கடந்து சென்றன.
அந்த வழியாக வாகனங்களில் சென்ற பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யானை கூட்டம் சாலையை கடப்பதை ஆர்வமாக பார்த்து மகிழ்ந்தார்கள். சிலர் செல்போனில் படம் பிடித்தார்கள்.