கோவிலில் உண்டியல் பணம் திருட்டு; வாலிபர் கைது
நெல்லையில் கோவிலில் உண்டியல் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை கங்கைகொண்டான் அருகே உள்ள வெங்க டாசலபுரத்தில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சம்பவத்தன்று மர்மநபர்கள் 2 பேர் புகுந்து, அங்கு உண்டியலில் இருந்த ரூ.900-ஐ திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தெற்குபட்டியை சேர்ந்த மாடசாமி (வயது 32) உள்பட 2 பேர் சேர்ந்து உண்டியல் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாடசாமியை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.