வேனில் புகையிலை பொருட்கள் கடத்தல்; 2 பேர் கைது

வேனில் புகையிலை பொருட்கள் கடத்தல்; 2 பேர் கைது

Update: 2021-07-16 20:53 GMT
திருமங்கலம்
திருமங்கலம்-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் திருமங்கலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை போலீசார் சோதனை செய்தனர். சோதனையின்போது வேனில் வந்த இருவரும் முன்னுக்குப்பின் பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் மூடிய நிலையில் இருந்த சாக்கு மூடையை சோதனை செய்தனர். சாக்கு மூடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.. விசாரணையில் மதுரை கீழ சந்தைப்பேட்டை சேர்ந்த அக்பர் (வயது 23), முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த ஜாபர் சாதிக்(32) என்பது ெதரியவந்தது. இவர்கள் இருவரையும் திருமங்கலம் நகர் போலீசார் கைது செய்து, 625 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்

மேலும் செய்திகள்