அம்பை பகுதியில் 9 ரவுடிகள் கைது

அம்பை பகுதியில் 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-16 20:45 GMT
அம்பை:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அறிவுறுத்தலின்பேரில், அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி ஆகிய போலீஸ் நிலையங்கள் உள்ளடங்கிய அம்பை உட்கோட்டத்தில் 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சேரன்மாதேவி உதவி கலெக்டரிடம் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களிடம் நன்னடத்தை சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்க ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்