தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லை டவுன் குளத்தடி தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 46). இவர் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று சுடலைமுத்து வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.