டாஸ்மாக் கடையில் ரூ.60 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு

வீரவநல்லூரில் டாஸ்மாக் கடையில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.

Update: 2021-07-16 20:29 GMT
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் கிளாக்குளம் மெயின் ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் ஊழியர்கள் இந்த கடையை பூட்டிச் சென்றனர். பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு 8 பெட்டிகளில் இருந்த 288 மதுபாட்டில்களை திருடிச் சென்று விட்டனர். அதன் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் ஆகும்.

நேற்று காலையில் டாஸ்மாக் கடைக்கு சென்ற ஊழியர்கள், அங்கு கதவு திறந்து கிடந்ததையும், மதுபாட்டில்கள் திருடு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளரான சீனியாபுரம் மாரியப்பன் அளித்த புகாரின்பேரில், வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்