சரக்கு ெரயில் வருமானம் அதிகரிப்பு; பயணிகள் ரெயில் வருவாய் குறைவு

பொது முடக்கத்தின் போது சரக்கு ெரயில் வருமானம் அதிகரித்தும், பயணிகள் ரெயில் வருவாய் குைறந்தும் காணப்பட்டது.

Update: 2021-07-16 20:11 GMT
விருதுநகர், 
கொரோனாபரவல் காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. தொடக்க காலத்தில் சரக்கு ெரயில் போக்குவரத்தை தவிர பயணிகள் ெரயில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
 இதையடுத்து தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்ட நிலையில் பயணிகள் ெரயில் குறிப்பிட்ட வழித்தடங்களில் சிறப்பு ெரயில்களாக இயக்கப்பட்டன. அதிலும் ெரயில்வே நிர்வாகம் வழக்கமான எக்ஸ்பிரஸ் ெரயில்களையும், சிறப்பு ரெயில்கள் என வகைப்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை தொடங்கியது. எனினும் முக்கியமான வழித்தடங்களில் கூட சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பயணிகள் ெரயில் இயக்கப்பட வில்லை.
குறைந்தது 
இந்நிலையில் பொது முடக்கம் காரணமாக மதுரை கோட்டத்தில் உள்ள தென் மாவட்ட ெரயில் நிலையங்களில் பயணிகள் ெரயில் மூலம் வரக்கூடிய வருமானத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. முந்தைய ஆண்டுகளைவிட கடந்த நிதியாண்டில் பயணிகள் ெரயில் வருமானம் வெகுவாக குறைந்துள்ளது.
 விருதுநகர் ெரயில் நிலையத்தில் கடந்த 2017-18-ம் நிதியாண்டில் பயணிகள் ெரயில் மூலம் ரூ.17 கோடி, 2018-19-ம் நிதியாண்டில் ரூ. 19 கோடி, 2019-2020-ம் நிதியாண்டில் ரூ. 18 கோடி வருமானம் வந்த நிலையில் கடந்த நிதி ஆண்டில் ரூ.6 கோடி மட்டுமே வருமானம் வந்துள்ளது. இதேபோன்று நெல்லை ெரயில்வே நிலையத்தில் கடந்த 2017-18-ம் நிதி ஆண்டில் ரூ.86 கோடியும், 2018-19-ம் நிதியாண்டில் ரூ.97 கோடியும்,  2019-2020-ம் நிதியாண்டில் ரூ.89 கோடியும் வருமானம் வந்த நிலையில் கடந்த நிதியாண்டில் ரூ.24 கோடி மட்டுமே வருமானம் வந்துள்ளது.
ராஜபாளையம் 
 மதுரை ெரயில் நிலையத்தில் கடந்த 2017-18-ம் நிதியாண்டில் ரூ.141 கோடியும், 2018-2019-ம் நிதி ஆண்டில் ரூ.158 கோடியும், 2019-2020-ம் நிதிஆண்டில் ரூ.153 கோடியும், கடந்த நிதியாண்டில் ரூ. 34 கோடியும் வருமானம் வந்துள்ளது. ராமநாதபுரம் ெரயில் நிலையத்தில் 2017-2018-ம் நிதியாண்டில் ரூ.19 கோடியும், 2018-2019-ம் நிதியாண்டில் ரூ.13 கோடியும், 2019-2020-ம் நிதியாண்டில் ரூ.12 கோடியும், கடந்த நிதியாண்டில் ரூ.4 கோடியும் வருமானம் வந்துள்ளது.
 பரமக்குடி ெரயில் நிலையத்தில் 2017-2018-ம் நிதியாண்டில் ரூ.9 கோடி வருமானம் வந்துள்ளது. 2018-2019-ம் நிதி ஆண்டில் ரூ.8 கோடியும், 2019-2020-ம் நிதிஆண்டில் ரூ.8 கோடியும் கடந்த நிதி ஆண்டில் ரூ.3 கோடியும் வருமானம் வந்துள்ளது.
 ராஜபாளையம் ெரயில் நிலையத்தில் கடந்த 2017-2018-ம் நிதியாண்டில் ரூ.7 கோடியும், 2018-2019-ம் நிதி ஆண்டில் ரூ.8 கோடியும் 2019-20-ம் ஆண்டில் ரூ.8 கோடியும், கடந்த நிதி ஆண்டில் ரூ.2 கோடி வருமானம் வந்துள்ளது.
தென்காசி 
கோவில்பட்டி ெரயில் நிலையத்தில் 2017-2018-ம் ஆண்டில் ரூ.17 கோடியும், 2018-2019 நிதியாண்டில் ரூ.18 கோடி, 2019-2020-ம் நிதிஆண்டில் ரூ.18 கோடியும் கடந்த நிதியாண்டில் ரூ.4 கோடியும் வருமானம் வந்துள்ளது.
தூத்துக்குடி ெரயில் நிலையத்தில் கடந்த 2017-2018-ம் நிதியாண்டில் ரூ. 28 கோடியும், 2018-2019-ம் நிதியாண்டில் ரூ.32 கோடியும், 2019-2020-ம் நிதிஆண்டில் ரூ.32 கோடியும் கடந்த நிதியாண்டில் ரூ.11 கோடியும் வருமானம் கிடைத்துள்ளது.
 தென்காசி ெரயில் நிலையத்தில் கடந்த 2017-2018-ம்  நிதியாண்டில் ரூ.11 கோடியும், 2018-2019-ம் நிதியாண்டில் ரூ.13 கோடியும், 2019-2020-ம் நிதி ஆண்டில் ரூ.14 கோடியும், கடந்த நிதியாண்டில் ரூ.5 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
அதிகரிப்பு 
இந்தநிலையில் தொடக்க காலத்தில் சரக்கு ெரயில் போக்குவரத்து வழக்கமாக இயக்கப்பட்ட நிலையில் லாரி போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
 அத்தியாவசிய பொருட்கள் சில ரெயில்கள் மூலமாகவே அனுப்பப்பட்டு வந்தது. இதனால் கடந்த ஆண்டு சரக்கு ெரயில் வருமானம் முந்தைய ஆண்டு சராசரியை விட 44 சதவீதம் அதிகரித்துள்ளது. பயணிகள் ெரயில் வருமானத்திற்கு பாதிப்பு ஏற்பட காரணம் நோய் பரவல் காரணமாக பொதுமக்கள் வெளியூர் பயணத்தை தவிர்த்து அனைத்து சிறப்பு ெரயில்களிலும் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது. இதனால் சில காலகட்டங்களில் ெரயில்வே நிர்வாகம் சில சிறப்பு ெரயில்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மொத்தத்தில் பொது முடக்க காலம் பயணிகள் ெரயில் வருமானத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. 
பொது முடக்கத்தின் போது சரக்கு ெரயில் வருமானம் அதிகரித்தும், பயணிகள் ரெயில் வருவாய் குைறந்தும் காணப்பட்டது. 

மேலும் செய்திகள்