திருமேனிநாதர் கோவில் ஆடித்தபசு விழா கொடியேற்றம்

திருச்சுழி திருமேனிநாதர் கோவில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2021-07-16 20:07 GMT
காரியாபட்டி, 
 திருச்சுழியில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ திருமேனிநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக திருமேனிநாத சுவாமி மற்றும் துணைமாலையம்மன் ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின்னர் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் திருமேனிநாத சுவாமி, துணைமாலையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஆடித்தபசு திருவிழாவையொட்டி 10 நாட்கள் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தினமும் சுவாமி மற்றும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறது. 27-ந் தேதி மாலை 4 மணிக்கு மேல் சுவாமி திருமேனிநாதர் ரிஷப வாகனத்தில் புறப்பட்டு திருச்சுழி குண்டாற்றில் எழுந்தருளி துணைமாலை அம்மனுக்கு தபசு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்