பெரம்பலூரில் கொரோனாவுக்கு முதியவர் உயிரிழப்பு

பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்தார்.

Update: 2021-07-16 19:30 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்றவர்களில் 14 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 189 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 616 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்