திருவண்ணாமலை மாவட்டத்தில் உழவர் சந்தைகள் 19.ந் தேதி முதல் செயல்படும்

உழவர் சந்தைகள் 19.ந் தேதி முதல் செயல்படும்

Update: 2021-07-16 18:39 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் திருவண்ணாமலை, தாமரை நகர், செங்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, கீழ்பென்னாத்தூர் ஆகிய 8 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த உழவர் சந்தைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. ஊரடங்கு தளர்வுகள் காரணமாக வருகிற 19-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் இந்த உழவர் சந்தைகள் மீண்டும் செயல்படும்.

மேலும் அரசின் கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் படி உழவர் சந்தைக்கு வரும் நுகர்வோர் மற்றும் விவசாயிகள் முககவசம் அணிந்து முறையான சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது. விவசாயிகள் கிருமி நாசினி பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவுமாறும், கையுறைகள் அணிந்து காய்கறிகள் விற்பனை செய்ய வேண்டும். 

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்