அரக்கோணம் அருகே வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
அரக்கோணம் அருகே வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
அரக்கோணம்
அரக்கோணத்தை அடுத்த மேல்ஆவதம் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் மர்ம நபர் ஒருவர் மிரட்டி பணம் பறிப்பதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்குள்ள கடை ஒன்றில் பணம் பறிக்க முயன்ற நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதேப் பகுதியை சேர்ந்த குபேந்திரன் மகன் தினேஷ் குமார் என்ற காந்தி (வயது 23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.