கரூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கரூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீ சார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-07-16 18:21 GMT
கரூர்
நகை-பணம் திருட்டு
கரூர் பசுபதிபாளையம் அருகே உள்ள நல்லப்பநகரை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 32). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. 
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த 1 பவுன் தங்க சங்கிலி, 2½ பவுன் தங்க காயின், ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. 
வலைவீச்சு
இந்த திருட்டு குறித்து சந்தோஷ் குமார் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில்,  போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்