திருப்பத்தூரில் பழங்குடியினர் சாதி சானறிதழ் கேட்டு 1,715 மனுக்கள்

பழங்குடியினர் சாதி சானறிதழ் கேட்டு 1,715 மனுக்கள்

Update: 2021-07-16 18:01 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு வருகின்றனர். இதனையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் சிறப்பு முகாம் நடத்த கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டார். 

அதனைத் தொடர்ந்து நேற்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற்றது. ஜவ்வாதுமலையில் புதூர் நாடு, புங்கம்பட்டுநாடு நெல்லி வாசல் நாடு ஆகிய பகுதிகளில் திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர், திருப்பத்தூர் தாலுகாவில் ஏலகிரிமலை உள்பட 57 கிராமங்களில் பழங்குடயினர் இன சாதி சான்றிதழ் கேட்டு 1,715 மனுக்களை கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் பெற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்