சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி மலை அடிவாரப்பகுதியில் உள்ள விளை நிலத்தில் அதிக மகசூல் தரக்கூடிய வம்பன் ரக உளுந்து சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பெரும்பாலானோர் உளுந்து சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தற்போது பயிரிடப்பட்ட உளுந்து பயிர் நன்கு முளைத்து வளர்ந்து பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. உளுந்து நன்கு வளர்ந்து உள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.