மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.;
நயினார்கோவில்,
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சாலைகளிலும் தெருக்களிலும் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. மழை தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் வார சந்தைக்கு வந்த வியாபாரிகளும் பொதுமக்களும் கடும் அவதிப்பட்டனர்.