கார் மோதியதில் வாலிபர் சாவு

காரைக்குடி அருகே கார் மோதியதில் வாலிபர் இறந்தார்.

Update: 2021-07-16 17:25 GMT
காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள இலுப்பைக்குடியை சேர்ந்தவர் மணிமுத்து (வயது 22). இவர் காரைக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மணிமுத்து காரைக்குடி- திருச்சி பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் காரைக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். உ.சிறுவயல் விலக்கு அருகே வந்த போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மணிமுத்துவை அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகி்ச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
விசாரணையில் ஆதனக்கோட்டையை சேர்ந்த அரசு டாக்டர் விஜய் ராமநாதபுரத்தில் உள்ள கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தஞ்சாவூருக்கு காரை ஓட்டி சென்ற போது மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து நடந்து இருப்பது தெரிய வந்தது. இது குறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்