ரெயில்வே சுரங்க பாதையில் ரூ.22 லட்சத்தில் மேற்கூரை அமைப்பு

கோவில்பட்டி ரெயில்வே சுரங்க பாதையில் ரூ.22 லட்சத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-16 17:20 GMT
கோவில்பட்டி:
மதுரை- நெல்லை இரட்டை ரெயில் பாதை பணிகள் தொடங்கும் போது கோவில்பட்டி லட்சுமி மில் ரெயில்வே கேட்டை மூடிவிட ரெயில்வே நிர்வாகம் எடுத்த முடிவிற்கு, சீனிவாசநகர், இந்திரா நகர், அத்தை கொண்டான், இனாம் மணியாச்சி பகுதி மக்கள் தங்களுக்கு பாதை வசதி செய்த பின்புதான் கேட்டை மூடவேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையொட்டி ெரயில்வே நிர்வாகம் அந்தப்பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்லாமல், சுரங்க வழிப்பாதை ரூ.2.50 கோடியில் அமைத்து கொடுத்தது. ஆனால் சுரங்க வழிப்பாதையில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிப்பட்டனர். எனவே சுரங்க வழிப்பாதையில் மேற்கூரை அமைக்க வேண்டும், சுரங்க வழிப்பாதையில் தேங்கும் நீரை வெளியேற்ற மோட்டார் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு ரெயில் நிர்வாகம் மேற்கூரை அமைக்க ரூ22 லட்சம் அனுமதி அளித்தது. அந்த பணிகள் முடிவடைந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். சுரங்க வழிப்பாதையில் மின்விளக்குகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என இனாம் மணியாச்சி பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்