போலீஸ் பிடியில் இருந்து தப்பிய கைதி பிடிபட்டார் உதவியாக இருந்த அண்ணனும் சிக்கினார்

உளுந்தூர்பேட்டையில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிய கைதி பிடிபட்டார் உதவியாக இருந்த அண்ணனும் சிக்கினார்

Update: 2021-07-16 16:45 GMT
உளுந்தூர்பேட்டை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எஸ்.மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 23). இவர் 16 வயது சிறுமியை கடத்தி சென்று விட்டதாக எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள உறவினர் வீ்ட்டில் தங்கி இருந்த அய்யப்பனை சிறுமியின் பெற்றோர் பிடித்து போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது அய்யப்பனுக்கு காலில் காயம் இருந்ததால் அவரை சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது போலீசாரிடம் சிறுநீர் கழித்து வருவதாக கூறி சென்ற அய்யப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

இதற்கிடையே தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கன்னியாகுமரி - சித்தூர் சாலையில் ஆசனூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் பதுங்கியிருந்த அய்யப்பனை இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் இவர் தப்பி செல்வதற்கு உதவியாக இருந்த அவரது அண்ணன் ஆறுமுகத்தையும் போலீசார் கைது செய்தனர்.  

மேலும் செய்திகள்